ஓட்டுக்கு ஒரு லட்சம் அறிவித்தாலும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள்: டிடிவி தினகரன்
ஓட்டுக்கு ஒரு லட்சம் அறிவித்தாலும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
ஓட்டுக்கு ஒரு லட்சம் அறிவித்தாலும் திமுகவுக்கு யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என்று அமமுக பொதுச்செயலர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மதுரை நாகமலை புதுக்கோட்டையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து நயினார் நாகேந்திரன் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, தனிப்பட்ட விமர்சனங்களை யாரும் தவிர்க்க வேண்டும். நயினார் நாகேந்திரன் பொதுவாக பேசக்கூடியவர் அல்ல, நான் அதை பார்க்கவில்லை. தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்ப்பது தான் ஆரோக்கியமான அரசியலாக இருக்கும்.
ரூ.5,000 இல்லை 50,000 அறிவித்தாலும் உறுதியாக இந்த முறை திமுக ஆட்சி முடிவுக்கு வந்துவிடும். மக்களை ஏமாற்றுகிற ஆட்சி முடிகிற தருவாயில் உள்ளது. விவசாயிகள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள், அனைத்துத் தரப்பு அரசு ஊழியர்கள், மேலும் இளைஞர்கள் வேலை வாய்ப்பின்மை நிறைய உருவாகி இருக்கிறது. போதைப்பொருட்கள் கலாச்சாரம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள்கள் பள்ளிகளில் கிடைக்கும் அளவிற்கு இந்த ஆட்சியில் சட்ட ஒழுங்கு போய் உள்ளது.
Advertisement
Advertisement
இந்த ஆட்சியில் சிறு பெண் குழந்தைகள் முதல் மூதாட்டிகள் வரை யாருக்கும் பாதுகாப்பு இல்லை. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஓட்டுக்கு பணம் கொடுத்து மக்களை வாங்கிவிடலாம் என்று இந்த திமுக ஆட்சியும் நினைக்கிறது, அது முடியாது. அம்மாவின் தொண்டர்கள் ஓரணியில் இணைந்துவிட்ட பயம் இந்த அறிவிப்பில் தெரிகிறது. ஐயாயிரம் இல்லை ஐம்பதாயிரம் அறிவித்தாலும், ஒரு லட்சம் அறிவித்தாலும் இந்த ஆட்சிக்கு யாரும் வாக்களிக்க போவதில்லை.
ஆதிதிராவிட பழங்குடியின மக்களின் நலத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 11 ஆயிரம் கோடி நிதியை தேர்தல் நேரத்தில் தோல்வி பயத்திற்காக மகளிருக்கு கொடுப்பதற்காக மடை மாற்றம் செய்திருப்பது உண்மையாக முத்துவேல் கருணாநாநிதி ஸ்டாலின் நிதி அல்ல அரசு நிதி. கடை தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது போல் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி பலமாக ஒன்றிணைந்து இருக்கிறது, மேலும் புதிய கட்சிகள் வர வாய்ப்பு இருப்பதாக நினைக்கிறேன்.
அம்மா ஆட்சி அமைய ஓபிஎஸ்தான் முடிவு எடுக்க வேண்டும். அம்மா வழி வந்தவர்கள் அம்மா தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்று அம்மா ஆட்சி அமைய தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவ அளிப்பார்கள். அப்படி இல்லையென்றால் யாராக இருந்தாலும் அவர்களின் முகத்திரை கிழிந்து விடும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அண்ணா திமுக தலைமையில் ஆட்சி அமையப்போகிறது என்பதுதான் எங்கள் கருத்து.
திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக கூட்டணியில் இருப்பார்களா இல்லையா என்று தெரியாத அளவிற்கு ஒரு நிலவரம் தமிழகத்தில் உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றிணைக்கும் போது பல விவாதங்களை நடத்தினார்கள். ஆனால் உண்மையிலேயே திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கப் போகிறார்களா, இல்லையா என்னும் அளவிற்கு காங்கிரஸ், திமுகவுக்கான பணிப் போர் நடைபெறுகிறது. அதற்கு யாரும் விவாதம் நடத்தவில்லை.
நாங்கள் அம்மாவின் பிள்ளைகள் என்பதால் எங்கள் மனஸ்தாபங்கள், கருத்து வேறுபாடுகளை தூக்கி எறிந்து விட்டு அம்மாவின் ஆட்சி அமைந்து, அம்மாவின் கொள்கைகள் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளோம். ஆனால் திமுக கூட்டணியில் உள்ள இடர்பாடுகள் பற்றி யாரும் பேசவில்லை. ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு, போதை அரக்கர்கள் கஞ்சா போதையில் இருந்து தமிழகத்தை மீட்க ஒன்றிணைந்திருக்கிறோம். உறுதியாக வெற்றி பெறுவோம்.
சுமுகமான முறையில் எல்லா கட்சிகளுக்கும் தொகுதிப் பங்கீடு கௌரவமான விதத்தில் வழங்கப்படும். குக்கர் சின்னத்தில் போட்டியிடுவோம். ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை காப்பாற்றுவதற்கு, போதை அரக்கர்கள் கஞ்சா போதையில் இருந்து தமிழகத்தை மீட்க ஒன்றிணைந்திருக்கிறோம். உறுதியாக வெற்றி பெறுவோம். ஆட்சியில் பங்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கேட்குமா என்ற கேள்விக்கு: அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று நாங்கள் கண்டிசன் போடவில்லை.
எங்களைச் சேர்ந்தவர்கள் அமைச்சராக வேண்டும் என்பது எனது விருப்பம் தான் என்று சொன்னேன். ஆசை என்று சொன்னேனே தவிர நோ கண்டிஷன்ஸ். அதிமுக மூத்த தலைவர்கள் போட்டியிடும் தொகுதியில் முதல்வர் மருமகன் சபரீசன் இறங்கி வேலை பார்ப்பதாக வந்த தகவல் குறித்த கேள்விக்கு: சபரீசன் அல்ல மாரிசனே வந்தாலும் வந்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்த கேள்விக்கு: தமிழ்நாட்டில் இதுவரை கூட்டணி ஆட்சிக்கு மக்கள் வாய்ப்பு தந்ததில்லை. வரும் தேர்தலில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் எனக் கூறினார்.
AMMK General Secretary TTV Dhinakaran has said that no one will vote for DMK even if one lakh rupees are announced for each vote.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.