முகப்பு
தமிழ்நாடு

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்: முதல்வர் ஸ்டாலின்

கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின்.

Updated On : 14 பிப்ரவரி 2026, 4:54 pm IST
முதல்வர் ஸ்டாலின்
பகிர்:

இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

கீழடியில் ரூ. 24.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள திறந்தவெளி அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று (பிப். 13) திறந்து வைத்தார்.

கீழடியில் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடங்களை திறந்தவெளி அருங்காட்சியமாக மாற்றும் பணி நடைபெற்று வந்த நிலையில், இந்த அருங்காட்சியகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Advertisement

Advertisement

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் திறப்பு; தேர்வுகள் முடிந்ததும் மாணவர்களைப் பெற்றோர் அழைத்து வாருங்கள்.

கீழடியின் பானை ஓடுகளில் நாம் கண்டெடுத்த தமிழி எழுத்துகள், கடல் கடந்து, எகிப்து நாட்டின் பிரமிடுகளிலும் இடம்பெற்றுள்ள மகிழ்ச்சியை மேலும் பெருக்கிடும் வகையில், கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்தைத் திறந்து வைத்திருக்கிறேன்.

ராமநாதபுரம் - நாவாய், ஈரோடு - நொய்யல் அருங்காட்சியகங்களுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.

தமிழர் தொன்மையின் தடங்களைத் தேடித் தேடிக் கண்டறிந்து உலகுக்கு அறிவிப்போம்! இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றைத் தெற்கில் இருந்தே எழுதுவோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

summary

Chief Minister Stalin has posted that we will write the history of the Indian subcontinent from the south.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.