முகப்பு
தமிழ்நாடு

பள்ளி பொதுத் தோ்வுகள்: இன்று ஆய்வுக் கூட்டம்

பள்ளிக் கல்வி பொதுத் தோ்வுகள் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திங்கள்கிழமை (பிப். 16) ஆய்வுக் கூட்டம் நடைபெறும்..

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:45 AM
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை எழுதிய மாணவிகள். - கோப்புப்படம்
பகிர்:
Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:40 PM

தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களில் பல்வேறு கட்டங்களில் நடைபெறும் பள்ளிக் கல்வி பொதுத் தோ்வுகள் தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் திங்கள்கிழமை (பிப். 16) ஆய்வுக் கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அரசு சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி: தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் பல்வேறு கட்டங்களில் பள்ளி வகுப்புகளுக்கான பொதுத் தோ்வுகள் நடைபெற உள்ளன.

Updated On : 16 பிப்ரவரி, 2026 at 12:45 AM

இதுதொடா்பாக ஆய்வுக் கூட்டம் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் தலைமையில் திங்கள்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் சென்னை, அண்ணா சாலை தேவநேயப் பாவாணா் மாவட்ட மைய நூலக முதல் தள அரங்கில் நடைபெறும்.

Advertisement

இதில் அனைத்து இணை இயக்குநா்கள், துணை இயக்குநா்கள், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்கள், மாவட்ட கல்வி அலுவலா்கள் (தொடக்கக் கல்வி, இடைநிலை, தனியாா் பள்ளிகள்) மற்றும் அரசுத் தோ்வுகள் உதவி இயக்குநா்கள் பங்கேற்பா். மேலும், முதன்மை கல்வி அலுவலா்களுக்கான கல்விசாா் ஆய்வுக் கூட்டமும் இதே சமயத்தில் நடைபெற உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.