முகப்பு
தமிழ்நாடு

இபிஎஸ் உடன் நயினார் நாகேந்திரன், எல். முருகன் சந்திப்பு!

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசனை...

Updated On : 16 பிப்ரவரி 2026, 8:22 pm IST
எடப்பாடி பழனிசாமி - நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

நாஅதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் சந்தித்துள்ளனர்.

சென்னை பசுமைவழிச் சாகையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைப்பது குறித்து ஆலோசித்ததாகத் தெரிகிறது.

நேற்று கோவையில் நடைபெற்ற மகா சிவராத்திரி விழாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியுடன் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சந்தித்துப் பேசினார்.

Advertisement

Advertisement

தேமுதிக தரப்பில் இன்னும் கூட்டணி தொடர்பான நிலைப்பாடு அறிவிக்கப்படாத நிலையில், கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தில் சில கட்சிகளை இணைப்பது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்திருந்தது. எனினும் திமுக உடனும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிக தொகுதிகளை கொடுக்கும் கூட்டணியில் தேமுதிக இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

summary

Nayinar Nagendran L. Murugan meets Edappadi Palaniswami

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.