முகப்பு
தமிழ்நாடு

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் 12 லட்சம் பேர் பயன்!

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் பயனடைந்தவர்கள் பற்றி...

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 5:00 AM
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு
பகிர்:

புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் திட்டங்களில் இதுவரை 12 லட்சத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றது.

பட்ஜெட் உரையின்போது அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது:

Advertisement

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படித்து, உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் கீழ் 6.95 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்.

இதேபோல், அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1000 நிதியுதவி வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 5.40 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார்.

summary

12 lakh people benefited from the innovative women and Tamil sons projects!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments