முகப்பு
தமிழ்நாடு

புதிய அறிவிப்புகளுடன் ஜூலையில் நிதிநிலை அறிக்கை: முதல்வர் ஸ்டாலின்

இடைக்கால பட்ஜெட் குறித்து முதல்வர் ஸ்டாலின் தெரிவித்ததாவது:

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 9:05 AM
முதல்வர் ஸ்டாலின் - படம்: DIPR
பகிர்:

புதிய அறிவிப்புகளுடன், இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையை ஜூலையில் தாக்கல் செய்வோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (பிப். 17) தாக்கல் செய்தார்.

இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், ”இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

Advertisement

மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை படைத்திருக்கும் ஐந்தாண்டுகளை நிறைவு செய்கிறோம்!

ஜூலை மாதம் திராவிட மாடல் 2.0-வில் புதிய அறிவிப்புகளுடன் இன்னும் பிரமாண்டமான சாதனைகளுக்கு அடித்தளமிடும் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம்!

நமது அரசின் சாதனைகளில் சிலவற்றையும் - மத்திய பா.ஜ.க. அரசு செய்துவரும் ஓரவஞ்சனைகளில் சிலவற்றையும் உங்களின் பார்வைக்குப் பகிர்கிறேன்” என்று குறிப்பிட்டு, தொடர்பான சில புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

summary

Chief Minister Stalin has said that in July, we will present a financial statement that will lay the foundation for even greater achievements with new announcements in the Dravidian Model 2.0.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments