தமிழ்நாடு

9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு! மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை!

2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கை பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

சோழவந்தான் வெற்றிலை உள்பட 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதாகவும் மேலும் 32 பொருள்களுக்கு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் வேளாண் இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக இடைக்கால பொது பட்ஜெட்டைத் தொடர்ந்து 2026 -27 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால வேளாண் நிதிநிலை அறிக்கையை தமிழக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் தாக்கல் செய்து பேசினார்.

அவர் பேசுகையில்,

"தக்காளி, மா , பலா, மிளகாய், சிறுதானியங்கள் போன்ற தேங்காய், விளைபொருள்களை மதிப்புக்கூட்டி உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தைகளில் விற்பனை செய்ய ஏதுவாக, 10 கோடி ரூபாய் வரையிலான புதிய திட்டங்களுக்கு 25 சதவீதம் முதல் 35 சதவீதம் வரை என ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில், 100 மதிப்புக்கூட்டும் மையங்கள் அமைப்பதற்கு 50 கோடி ரூபாய் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சமையல் எண்ணெய்க்கான சந்தை ஊக்குவிக்கும் மையம், வேளாண் சந்தை நுண்ணறிவு மற்றும் உழவர் ஆலோசனை மையங்கள், சிறுதானியங்கள், மிளகு பதப்படுத்தும் நிலையங்கள், தென்னை மதிப்புக் கூட்டும் மையம், வாழை ஏல மையம், மஞ்சள் மதிப்புக்கூட்டும் மையம், ஒருங்கிணைந்த கிராம வேளாண் சந்தை வளாகம் போன்ற வசதிகள் மொத்தம் ரூ.134 கோடி மதிப்பீட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஐந்து மாநிலத்தின் தனித்துவமான ஆண்டுகளில், விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இதுவரை 41 விளைபொருள்களுக்கு விண்ணப்பிக்கப்பட்டன. இதில், சோழவந்தான் வெற்றிலை, பண்ருட்டி பலாப்பழம், பண்ருட்டி முந்திரி, விருதுநகர் சம்பா வத்தல், இராமநாதபுரம் சித்திரைக்கார் அரிசி, புளியங்குடி எலுமிச்சை, செட்டிக்குளம் சின்ன வெங்காயம், தூயமல்லி அரிசி, கவுந்தப்பாடி நாட்டுச்சர்க்கரை ஆகிய 9 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது, மீதமுள்ள 32 விளைபொருள்களுக்கு புவிசார் குறியீடு பெற தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

Geographical Indication for 9 products; Steps to obtain for 32 products

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழ்நாடு இடைக்கால பட்ஜெட் 2026 - நேரலை! இன்ப அதிர்ச்சியில் உறைந்த தமிழகம்!

தியாகராஜன் குமாரராஜா திரைப்படத்துக்கு கதை, திரைக்கதை எழுதிய இயக்குநர்!

பொதுப்பணித் துறைக்கு ரூ. 1,694 கோடி ஒதுக்கீடு!

பெருந்தன்மை வேண்டாம்; நியாயத்தை மட்டுமே கோருகிறோம்: தங்கம் தென்னரசு

டி20 உலகக் கோப்பை: 19 வயதில் சதம் விளாசி வரலாறு படைத்த கனடா வீரர்!

SCROLL FOR NEXT