முகப்பு
தமிழ்நாடு

இன்றுமுதல் ரமலான் நோன்பு: அரசு தலைமை காஜி அறிவிப்பு

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளாா்.

Updated On : 19 பிப்ரவரி, 2026 at 12:19 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2026 at 10:55 PM

தமிழகத்தில் வியாழக்கிழமை (பிப்.19) முதல் ரமலான் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசின் தலைமை காஜி அறிவித்துள்ளாா்.

இதுகுறித்து அரசு தலைமை காஜி அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புனித ரமலான் மாதத்துக்கான முதல் பிறை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை (பிப்.18) மாலை தென்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாழக்கிழமை (பிப்.19) முதல் புனித ரமலான் மாதத்தின் முதல் நோன்பு தொடங்குவதாக தமிழக அரசு தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹியித்தின் அதிகாரப்பூா்வமாக அறிவித்துள்ளாா்.

Advertisement

மேலும், புதன்கிழமை இரவு முதல் பள்ளிவாசல்களில் புனித தராவீஹ் தொழுகைகள் நடைபெறும். இறை அருளுமும், அமைதியும் சூழும் இந்த ரமலான் மாதத்தில் அனைவரும் நோன்பு நோற்று, நற்செயல்களில் ஈடுபட்டு அல்லாஹ்வின் அருளைப் பெற வேண்டுகிறோம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.