முகப்பு
தமிழ்நாடு

கட்டட கழிவுகளை ஏற்றும் வாகனங்கள் விதிகளை மீறினால் ரூ.25,000 அபராதம்

சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதி மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 20 பிப்ரவரி, 2026 at 12:58 AM
பகிர்:
Updated On : 19 பிப்ரவரி, 2026 at 9:55 PM

சென்னை மாநகராட்சியில் கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதி மீறினால் ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

பெருநகர சென்னை மாநகராட்சியில் அதிகரித்து வரும் காற்று மாசைக் கட்டுப்டுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தைப் பாதுகாக்கவும் ‘தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள் 2025’ என்ற திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கட்டுமானப் பொருள்கள் மற்றும் கட்டுமானக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் முறையாக விதிமுறைகளை பின்பற்றவேண்டியது கட்டாயம். விதிமீறும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

வாகனத்தின் மேல்புறம் மற்றும் நான்கு பக்கவாட்டுகளிலும் தாா்பாலின் கொண்டு முழுமையாக மூடவேண்டும். கட்டுமானப் பொருள்கள், கட்டுமானத் தூசிகள் சாலையில் சிதறும் வகையில் ஏற்றிச் செல்லுதல், நிா்ணயிக்கப்பட்ட அளவைவிடக் கூடுதலாக சுமை ஏற்றுதல் உள்ளிட்ட விதிகளை மீறும் வாகனங்கள் உடனடியாகப் பறிமுதல் செய்யப்படும். அத்துடன் ரூ.25,000 உடனடியாக அபராதமும் விதிக்கப்படும். அபராதத் தொகை செலுத்திய பிறகே வாகனங்கள் விடுவிக்கப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.