முகப்பு
தமிழ்நாடு

மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு

எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்த்தாலும் திமுக மூழ்கப்போகும் கப்பல் என செல்லூர் ராஜு விமர்சனம்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 3:01 PM
செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு - DNS
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:54 PM

எத்தனை கட்சிகள் கூட்டணி சேர்த்தாலும், திமுக மூழ்கப்போகும் கப்பல் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி கோட்டையை அடையும் கப்பல் எனவும் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு இன்று (பிப். 22) தெரிவித்தார்.

மதுரை மேற்கு தொகுதிக்குட்பட்ட 70 வது வார்டு துரைசாமி நகரில் பூங்கா சுற்றுச்சுவர் மற்றும் மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை செய்த பின் செய்தியாளர்களுடன் செல்லூர் ராஜு பேசியதாவது:

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:56 PM

''தேர்தல் முடியும் வரை யாருக்கும்யாருக்கும் ஓய்வு இல்லை என்கிறார் முதல்வர். மதுரையில் 200 கோடி அளவில் ஊழல் செய்துவிட்டு, தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யலாமல் தொண்டர் எப்படி உழைப்பார்கள்.

Advertisement

பொங்கலுக்கு 3000 ரூபாயும், கோடைக்கால சிறப்பு தொகையாக 5000 ரூபாய் மட்டும் கொடுத்துவிட்டு மக்களின் தேவையை நிவர்த்தி செய்யாமல் எப்படி செயல்பட முடியும்'' எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை ஒருமையில் ஒருமையில் விமர்சிப்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த அவர்,

''முதல்வர் மு.க. ஸ்டாலின் எரிச்சலின் உச்சகட்டத்திற்குச் சென்றுவிட்டார். எடப்பாடி பழனிசாமி 10 தேர்தல் அறிக்கையை கொடுத்தார். அதில், ஆளும் கட்சி ஆட்டம் கண்டுவிட்டது.

எத்தனை கட்சிகளை கூட்டணி சேர்த்தாலும் திமுக மூழ்கப்போகும் கப்பல். தேசிய ஜனநாயக கூட்டணி தான் வெற்றி கோட்டையை அடையும் கப்பல்.

Updated On : 22 பிப்ரவரி, 2026 at 2:56 PM

படகோட்டி படத்தில் எம்ஜிஆர் அணி வெற்றி பெறுவது போல், அதிமுக அணி தான் வெற்றி பெறும். எதுவாக இருந்தாலும் அதிமுக அணி, பாரதிய ஜனதா தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவது உறுதி.

அதனால் தான் வருங்கால முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பார்த்து முதல்வர் எரிச்சலடைகிறார்.

இபிஎஸ் மீது முதல்வர் கோவப்படுகிறார் என்றால், இபிஎஸ் பலமாக இருப்பதாக அர்த்தம்" என செல்லூர் ராஜு பேசினார்.

summary

No matter how many parties join DMK will be a sinking ship: Sellur Raju

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.