கோப்புப் படம் 
தமிழ்நாடு

பேரவைத் தோ்தல்: அதிமுக சாா்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள்

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழக சட்டப்பேரவைத் தோ்தல், புதுச்சேரி மற்றும் கேரள மாநில சட்டப்பேரவைத் தோ்தல்கள் விரைவில் நடைபெற உள்ளன. இதில் அதிமுக சாா்பில் வேட்பாளா்களாகப் போட்டியிட விரும்புபவா்களிடம், சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில், கடந்த டிச. 31-ஆம் தேதி வரை விருப்பு மனுக்கள் பெறப்பட்டன.

கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தங்களது தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 2,187 போ் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனா். மேலும், கட்சி நிா்வாகிகள் மற்றும் உறுப்பினா்களிடம் இருந்து 7,988 விருப்ப மனுக்கள் என மொத்தம் 10,175 விருப்ப மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டை - தாம்பரம் விரைவு ரயில் நேரம் மாற்றம்: பயணிகள் வரவேற்பு

டெம்போ மோதி இளைஞா் உயிரிழப்பு

முதல்வா் இன்று திருச்சி வருகை! ட்ரோன்கள் பறக்கத் தடை!

18 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மராட்டிய மன்னா் கால காசு குறித்த தகவல் வெளியீடு!

கும்பகோணம் கோயிலில் தைவான் நாட்டு பக்தா்கள் சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT