மழை கோப்புப்படம்
தமிழ்நாடு

புத்தாண்டை வரவேற்ற மழை! சென்னை, 7 மாவட்டங்களில் காலை 10 வரை தொடரும்!

தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

364தமிழகத்தில் உள்ள 8 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்று அனைத்து மக்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மக்கள் மழையில் நனைந்தபடி புத்தாண்டை வரவேற்றனர்.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மிதமான மழை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கரூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rain welcomes the New Year! It will continue until 10 AM in Chennai and 7 other districts

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடல் பாடலுடன் துவங்கிய 2026! பிரமிக்க வைத்த Drone-கள் அணிவகுப்பு!

சென்னையில் விபத்தில்லா புத்தாண்டு! காவல் துறை அறிவிப்பு!

புத்தாண்டு கொண்டாட்டத்தின் இடையே நெதர்லாந்து தேவாலயத்தில் தீ விபத்து!

பிரபாஸின் ஸ்பிரிட் பட முதல் பார்வை போஸ்டர்!

டி20 உலகக் கோப்பை: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு; ஸ்மித்துக்கு இடமில்லை!

SCROLL FOR NEXT