முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து அடுத்த கட்ட நடவடிக்கை! - ஜாக்டோ ஜியோ
அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் பேட்டி..
முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும் என அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கமான ஜாக்டோ -ஜியோ கூறியுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், பழைய ஓய்வூதியத் திட்டம், புதிய பணியிடங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 8 ஆவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளிடம் அமைச்சர்கள் எ.வ. வேலு, தங்கம் தென்னரசு ஆகியோர் இன்று(ஜன. 2) பேச்சுவார்த்தை நடத்தினர்.
Advertisement
Advertisement
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ- ஜியோ அமைப்பினர்,
"பழைய ஓய்வூதியத் திட்டத்தை முதல்வர் நாளை அறிவிப்பார் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். மகிழ்ச்சியான செய்தியை அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறோம். சுமார் 22 ஆண்டுகளாக இதற்காக நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம்.
பழைய ஓய்வூதியத் திட்டம் எங்களது போராட்டத்தின் முக்கிய நோக்கம். முதல்வரின் அறிவிப்பைப் பொருத்து மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்து நாங்கள் ஏற்கெனவே அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.
மற்ற கோரிக்கைகள் குறித்தும் அமைச்சர்களிடம் பேசியிருக்கிறோம். அதுகுறித்த அறிவிப்பும் நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
முன்னதாக பழைய ஓய்வூதியத் திட்டம், காலிப் பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன. 6 முதல் ஜாக்டோ -ஜியோ அமைப்பினர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Next course of action will depend on CMs announcement: JACTTO-GEO
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.