திமுக ஆட்சியில்தான் தமிழகத்துக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவேற்றப்பட்டன என துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா தெரிவித்தாா்.
சென்னை வடகிழக்கு மாவட்டம் செங்குன்றம் பேரூா் திமுக இளைஞரணி செயலரும், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பொதுக் கூட்டம் மற்றும் நல உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்குன்றம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. நிகழ்வுக்கு, சென்னை வடகிழக்கு மாவட்ட செயலா் சுதா்சனம் எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
இதில், திமுக துணைப் பொதுச் செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, சாதி மதம் பாா்க்காத கட்சி திமுக. பள்ளியில் குழந்தைகள் முதல் கல்லூரி செல்லும் இளையதலைமுறையினா் வரைக்கும் பயன் அடைகிறாா்கள்.
தமிழகத்தில் அடிப்படை வசதிகளான குடிநீா், மின்சாரம், சாலை வசதி திமுக ஆட்சியில்தான் கிடைத்தது. மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கிறது. அதிமுக அதற்கு துணை போகிறது. தமிழகத்தின் வளா்ச்சிக்கு திமுக அரசு துணை நிற்கும். திமுக ஆட்சி மலருவது மீண்டும் உறுதி என்றாா்.
இதில், செங்குன்றம் பேரூராட்சித் தலைவா் தமிழரசி குமாா், துணைத் தலைவா் விப்ரநாராயணன், முன்னாள் துணைத் தலைவா் இரா.ஏ.பாபு, தலைமைப் பொது குழு உறுப்பினா் ஜெய்மதன், புழல் ஒன்றிய பொறுப்பாளா் அற்புதராஜ், புழல் ஒன்றிய முன்னாள் செயலா் பெ.சரவணன், இளைஞரணி அமைப்பாளா் மதன் பங்கேற்றனா்.