மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கிய முதல்வர் மு.க. ஸ்டாலின் படம் - டிஐபிஆர்
தமிழ்நாடு

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டத்தைத் தொடக்கிவைத்தார் முதல்வர்

10 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டத்தைத் தொடக்கிவைத்த முதல்வர்.

இணையதளச் செய்திப் பிரிவு

பத்து லட்சம் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் திங்கள்கிழமை இன்று (ஜன.5) தொடக்கி வைத்தார்.

மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக 10 லட்சம் மடிக்கணினிகள் வழங்கும் உலகம் உங்கள் கையில் திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (ஜன. 5) தொடக்கி வைத்தார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் துணை முதல்வர் உதயநிதி, மாநில அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் அரசு பொறியியல், கலை மற்றும் அறிவியல், மருத்துவம், விவசாயம், சட்டம், பலவகை தொழில்நுட்பக் கல்லூரி, தொழில்துறைப் பயிற்சி போன்ற அனைத்துத் துறைகள் சார்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின்

மடிக்கணினியின் சிறப்பு அம்சங்கள்

தொழில்நுட்ப அறிவியலை வலுப்படுத்த Dell, Acer, HP போன்ற உலகத் தரமான நிறுவனங்களின் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மாணவர்களுக்கு வழங்கப்படும் இந்த மடிக்கணினிகளில் Intel i3 / AMD Ryzen 3 Processor, 8 GB RAM, 256 GB SSD நினைவகம், Windows 11 Home Strategic மற்றும் BOSS Linux OS ஆகிய மென்பொருள்கள் முன்னதாக நிறுவப்பட்டுள்ள நிலையில், நடைமுறையில் உள்ள கல்வி மற்றும் திட்டப் பணிகளுக்காக MS Office 365, மேலும் “அறிவைத் தேடும் இளைய தலைமுறைக்குப் புதிய சாளரம்” என அமையும் செயற்கை நுண்ணறிவு மென்பொருளான Perplexity Pro–வின் ஆறு மாத சந்தாவும் கட்டணமில்லாமல் வழங்கப்படுகிறது.

The Chief Minister launched the scheme to provide laptops to 10 lakh students.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓட்டை, உடைசல் சீர்ப்படுத்தும் கடைகளுக்கான வரம்புச் சட்டங்கள் - 1

தங்கம், வெள்ளி விலை குறைவு! இன்றைய நிலவரம்!

இந்தியாவுக்கு சிக்கல்! ரஷிய எண்ணெய் வாங்கினால் 500% வரி! மசோதாவுக்கு டிரம்ப் ஒப்புதல்

சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை! ஜன நாயகனுக்கு காங்கிரஸ் ஆதரவு!

வெனிசுவேலா இனி அமெரிக்க பொருள்களை மட்டுமே வாங்கும்! டிரம்ப் அறிவிப்பு

SCROLL FOR NEXT