முகப்பு
தற்போதைய செய்திகள்

பிக் பாஸ் 9: இறுதி வாரத்துக்கு செல்பவர்கள் யார் யார்? வெளியேறக்கூடிய போட்டியாளர்கள் பட்டியல்!

இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்கள் பட்டியல் குறித்து....

Updated On : 5 ஜனவரி, 2026 at 10:28 AM
பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி.
பகிர்:

பிக் பாஸ் 9 நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் வெளியேறக்கூடிய போட்டியாளர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 14 வது வாரத்தை எட்டியுள்ளது. இந்த வாரம் பணப்பெட்டி போட்டி நடத்தப்பட்டு வருகிறது.

இதுவரை பிக் பாஸ் வீட்டில் இருந்து நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி, ப்ரஜின், ரம்யா ஜோ, வியானா, எஃப்ஜே, ஆதிரை, கனி திரு, அமித் பார்கவ், சுபிக்‌ஷா ஆகியோர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

பார்வதி மற்றும் கமரூதின் இருவருக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டனர்.

தற்போது, பிக் பாஸ் வீட்டில் 6 போட்டியாளர்கள் உள்ள நிலையில், இந்த வாரத்துக்கான நாமினேஷன் இன்று(டிச. 29) நடைபெற்றது.

நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியை அரோரா வென்றததால் அவரை நாமினேட் செய்ய முடியாது.

பிக் பாஸ் வீட்டில் உள்ளவர்கள், இந்தப் போட்டியில் நீடிக்கத் தகுதியுடைவர்கள் என்ற அடிப்படையில் இருவருக்கு வாக்களிக்க வேண்டும். மற்றவர்கள் நாமினேஷனுக்கு அனுப்பப்படுவார்கள்.

இதன் அடிப்படையில், இந்த வாரம் நாமினேஷனுக்கு கானா வினோத், திவ்யா கணேஷ், சபரிநாதன், சான்ட்ரா, விக்கல்ஸ் விக்ரம் ஆகியோரை சக போட்டியாளர்கள் தேர்வு செய்துள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களுக்கு இந்த வாரம் முழுவதும் மக்கள் வாக்களிப்பார்கள், இதில் குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர், இந்த வார இறுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் வெளியேற்றப்படுவார்.

இந்த வாரம் போட்டியிலிருந்து வெளியேறி, இறுதி வாரத்துக்கு யார் யார் செல்பவர்கள் என்ற ஆவல் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

summary

The list of contestants who are likely to be eliminated from Bigg Boss 9 this week has been released.

முழு கட்டுரையைப் படிக்க →