தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

திமுக ஆட்சியில் எந்தெந்த துறையில் எவ்வளவு ஊழல்? இபிஎஸ் வெளியிட்ட பட்டியல்!

திமுக ஆட்சியின் ஊழல் பட்டியலை வெளியிட்ட இபிஎஸ்...

இணையதளச் செய்திப் பிரிவு

ஊழல் குற்றச்சாட்டு: திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை துறைவாரியாக தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சியில் நடைபெற்ற ஊழல் பட்டியலை ஆதாரங்களுடன் வழங்கினார்.

மேலும், ஆளுநரிடம் உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.

பின்னர், செய்தியாளர்களுடன் பேசிய இபிஎஸ், துறைவாரியான ஊழல் பட்டியலை வெளியிட்டார்.

அதன்படி,

  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ. 64,000 கோடி

  • ஊரக வளர்ச்சித் துறையில் ரூ. 60,000 கோடி

  • சுரங்கம் மற்றும் கனிமவளத் துறையில் ரூ. 60,000 கோடி

  • எரிசக்தித் துறையில் ரூ. 55,000 கோடி

  • டாஸ்மாக் துறையில் ரூ. 50,000 கோடி

  • பத்திரப் பதிவுத் துறை ரூ. 20,000 கோடி

  • நெடுஞ்சாலைத் துறையில் ரூ. 20,000 கோடி

  • நீர்வள ஆதாரத் துறையில் ரூ. 17,000 கோடி

  • சென்னை மாநகராட்சியில் ரூ. 10,000 கோடி

  • தொழில்துறையில் ரூ. 8,000 கோடி

  • பள்ளிக் கல்வித் துறையில் ரூ. 5,000 கோடி

  • மக்கள் நல்வாழ்வுத் துறையில் ரூ. 5,000 கோடி

  • வேளாண்மைத் துறையில் ரூ. 5,000 கோடி

  • சமூக நலன் துறையில் ரூ. 4,000 கோடி

  • உயர்க்கல்வித் துறையில் ரூ. 1,500 கோடி

  • இந்து சமய அறநிலையத் துறையில் ரூ. 1,000 கோடி

  • ஆதிதிராவிடர் நலத் துறையில் ரூ. 1,000 கோடி

  • சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறையில் ரூ. 750 கோடி

  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறையில் ரூ. 500 கோடி

  • சிறைத் துறையில் ரூ. 250 கோடி

  • பால்வளத் துறையில் ரூ. 250 கோடி

  • மொத்த ஊழல் ரூ. 4 லட்சம் கோடி

How much corruption occurred in which departments during the DMK regime? The list released by EPS

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

இன்றுமுதல் பொங்கல் சிறப்புப் பேருந்துகள்! எங்கிருந்து இயக்கப்படும்? முழு விவரம்!

மேட்டூர் அணை நிலவரம்!

SCROLL FOR NEXT