முகப்பு
தமிழ்நாடு

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை: இபிஎஸ் குற்றச்சாட்டு

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

Updated On : 21 பிப்ரவரி, 2026 at 3:38 PM
சென்னையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி.
பகிர்:

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆவடி, அம்பத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் அவர் இன்று மேற்கொண்ட பிரசாரத்தின்போது பேசுகையில், அதிமுகவின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி வலிமையான கூடடணி. மக்கள் விரும்பும் கூட்டணி. விளம்பரம் செய்ய மக்களின் வரிப் பணத்தை மு.க.ஸ்டாலின் பயன்படுத்துகிறார். திட்டத்திற்காக பயன்படுத்துவதில்லை.

மக்கள் நலனுக்காக பயன்படுத்துவதில்லை. போலி விளம்பரத்திற்காக பயன்படுத்துகிறார்கள். நெடுஞ்சாலை துறையில் ஊழல் செய்ததாக என் மீது வழக்கு போட்டார்கள். தற்போது அந்த வழக்கை திமுகவே திரும்பப் பெறுவதாக சொல்லியுள்ளது. ஆனால் என்மீது போடப்பட்ட வழக்கை நீதிமன்றத்தில் நான் நடத்துகிறேன்.

Advertisement

நான் நிரபராதி என நிரூபிப்பதற்காக சந்திக்கிறேன். நேற்றைக்கு முன்தினம் அமைச்சர் மீது உயர்நீதிமன்றமே வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. தைரியம் இருந்தால் அமைச்சர் மீதான வழக்கை சந்தியுங்கள். அந்த பயத்தில்தான் முதல்வர் ஸ்டாலின் மதுரையில் உளறிக்கொண்டிருக்கிறார். ஊழல் நிறைந்த அரசு என்பதற்கு இதுவே உதாரணம்.

5 ஆண்டுகால திமுக ஆட்சியில் மக்களுக்கு எந்த பலனும் கிடைக்கவில்லை. திமுக ஆட்சியால் தான் தமிழ்நாடு தலைகுனியும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுகவினரே போதைப்பொருட்களை விற்பதால் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவில்லை. தமிழ்நாட்டில் எது கிடைத்தாலும் கிடைக்கவில்லை என்றாலும் கஞ்சா கிடைக்கிறது.

நிர்வாக திறமையன்றற அரசுதான் திமுக. இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments