தமிழ்நாடு

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது!

வங்கக் கடலில் நிலவும் புயல் சின்னம் வலுப்பெற்றுள்ளது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் புதன்கிழமை தெரிவித்துள்ளது.

பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடல் - தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, திங்கள்கிழமை (ஜன.5) மாலையில் தென்கிழக்கு வங்கக்கடல் - பூமத்திய ரேகையையொட்டிய இந்திய பெருங்கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.

இது செவ்வாய்க்கிழமை அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலுப்பெற்ற நிலையில், மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தற்போது வலுப்பெற்றுள்ளது.

தற்போது சென்னைக்கு தெற்கு - தென்கிழக்கு திசையில் 1,270 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த மண்டலம், அடுத்த 24 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த மண்டலமாக வலுப்பெற்று, மேற்கு - வடமேற்கு திசையில் நகரக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

‘ஆரஞ்சு’ எச்சரிக்கை: புயல் சின்னம் காரணமாக வெள்ளிக்கிழமை (ஜன. 9) மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கையும், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Storm symbol strengthened into Low-pressure system in Bay of Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூர் பலி: மத்திய உள்துறை அமைச்சகம், தடயவியல் துறை அதிகாரிகள் ஆய்வு!

கிருஷ்ணகிரி நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்குத் தண்ணீர் திறப்பு!

ஆஸ்கர் 2026: சிறந்த படத்துக்கான பட்டியலில் தேர்வான டூரிஸ்ட் ஃபேமலி!

அரசின் 50 வகையான சான்றிதழ்களை வாட்ஸ்ஆப் வழியாக பெறலாம்! எப்படி?

ரயில்வே வேலைக்கு நிலம்: லாலு உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT