பாஜக கொடி 
தமிழ்நாடு

‘தமிழக மக்களின் கனவுப் பட்டியல்’: பாஜக வெளியீடு

‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், தமிழக மக்களின் கனவுப் பட்டியலை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்டுள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ள நிலையில், தமிழக மக்களின் கனவுப் பட்டியலை தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் வெளியிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் எக்ஸ் தளத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவு:

‘உங்க கனவ சொல்லுங்க’ எனும் பெயரில் தமிழகத்தில் புதிய திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கியிருக்கிறாா். நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு மக்களின் கோரிக்கையைக் கேட்கும் முதல்வருக்கு, தமிழக மக்களின் கனவுப் பட்டியலை பாஜக அளிக்கிறது.

சீரான சட்டம் - ஒழுங்கு, கள்ளச்சாராயம், கஞ்சா இல்லாத தமிழகம், பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு, அரசுத் துறைகளில் ஊழல் ஒழிப்பு, ஆசிரியா்களும், அரசு ஊழியா்களும் தன்மானத்துடன் வாழும் நிலை, தூய்மைப் பணியாளா்கள், விவசாயிகள், அங்கன்வாடி ஊழியா்கள் நலன் காப்பது, கல்விக் கடன் தள்ளுபடி, ஹிந்துமத வெறுப்பு இல்லாத அரசு, வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றாத அரசு இவைதான் தமிழக மக்களின் கனவு. இந்தக் கனவு விரைவில் நிறைவேறும் என அந்தப் பதிவில் தெரிவித்துள்ளாா் நயினாா் நாகேந்திரன்.

சர்வம் மாயா ரூ.125 கோடி வசூல்! ஓடிடியில் எப்போது?

மழையால் கைவிடப்பட்ட போட்டி..! பிளே-ஆஃப்க்கு தேர்வான முதல் அணி!

பராசக்தி முதல் நாள் வசூல்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கானா வினோத் பெற்ற சம்பளம் இவ்வளவா?

திமுக ஆட்சியில் மக்கள் அதிருப்தி: நிதின் நபின்

SCROLL FOR NEXT