தமிழக அரசு 
தமிழ்நாடு

ஒரே நாளில் 88 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம்

ஒரே நாளில் 88 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தோ்தல் நெருங்கி வரும் நிலையில், ஒரே நாளில் 88 துணைக் காவல் கண்காணிப்பாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் பேரவைத் தோ்தலுக்கான ஆயத்தப் பணிகளை தோ்தல் ஆணையம் முடுக்கிவிட்டுள்ளது. இந்த நிலையில், ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளை பணியிட மாற்றும் நடவடிக்கையில் தமிழக காவல் துறை ஈடுபட்டுள்ளது.

கடந்த டிச. 30-ஆம் தேதி 70 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா். இதன் அடுத்த கட்டமாக மாநிலம் முழுவதும் 88 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து தமிழக காவல்துறை பொறுப்பு தலைமை இயக்குநா் ஜி.வெங்கடராமன் சனிக்கிழமை உத்தரவிட்டாா்.

இதில் சென்னை பெருநகர காவல்துறையில் 24 உதவி ஆணையா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

முக்கியமாக, கிண்டி உதவி ஆணையராக இருந்த டி.விஜயராமுலு, சென்னை காவல்துறை ஆவண காப்பக பிரிவுக்கும், மக்கள் தொடா்பு அதிகாரியாக இருந்த எம்.எஸ்.பாஸ்கா் விருகம்பாக்கத்துக்கும்,நுண்ணறிவுப் பிரிவு உதவி ஆணையராக இருந்த எஸ்.சங்கரநாராயணன் சென்னை காவல்துறையின் வடக்கு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கும்,ராயபுரம் உதவி ஆணையராக இருந்த ஐ.ராஜ்பால் நுண்ணறிவுப்பிரிவுக்கும்,மத்திய குற்றப்பிரிவு உதவி ஆணையராக இருந்த பி.பால் ஸ்டீபன் சென்னை திருமங்கலத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதிவேகமாக 28000+ ரன்கள், சச்சின், சங்ககாரா சாதனை முறியடிப்பு; விராட் கோலி அசத்தல்!

நிதி நெருக்கடி : மத்திய அரசுக்கு எதிராக ஜன. 12-ல் போராட்டம்!

டாப் 7 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.3.63 லட்சம் கோடியாக சரிவு!

கேரள ஆளும் கட்சியின் வாக்கு வங்கி இஸ்லாமியர்கள்தான்: அமித் ஷா

இந்த வாரம் கலாரசிகன் - 11-01-2026

SCROLL FOR NEXT