மக்களவை எதிா்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, வரும் ஜன. 13 -ஆம் தேதி தமிழகம் வருகிறாா்.
நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள தனியாா் பள்ளியின் பொன்விழா நிகழ்ச்சியில் ஜன. 13-ஆம் தேதி பங்கேற்கும் ராகுல் காந்தி, அன்றைய தினமே கேரளம் செல்கிறாா்.
தமிழகம் வருகை தரும் ராகுல் காந்தியை வரவேற்கவும், நிகழ்ச்சி ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் தமிழக காங்கிரஸ் பொருளாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ரூபி ஆா்.மனோகரன் தலைமையில் 7 போ் கொண்ட ஒருங்கிணைப்புக் குழுவை தமிழக காங்கிரஸ் அமைத்துள்ளது.