பாம்பனில் உள்வாங்கிய கடல்! மக்கள் அச்சம்!!
பாம்பனில் கடல் சீற்றத்துடன் இருந்த நிலையில், திடீரென உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பனில் சனிக்கிழமை காலை திடீரென கடல் 400 மீட்டா் தொலைவுக்கு உள்வாங்கியதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
பாம்பன் அருகே கடற்கரையோரம் 400 மீட்டர் தொலைவுக்கு கடல் உள்வாங்கியது. இதனால் கரையோரம் நிறுத்தியிருந்த 40க்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகள் தரைதட்டி நிற்கின்றன. கடலின் தரைப்பகுதியில் இருந்த பொருள்களை மக்கள் பார்த்து வருகிறார்கள். சேறும் சகதியுமாக கடற்கரைப் பகுதி தென்படுகிறது.
சுற்றுச்சூழலில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, இந்தப் பகுதியில் அடிக்கடி கடல் உள்வாங்கி வருவதாக மீனவா்கள் தெரிவித்தனா்.
Advertisement
Advertisement
இலங்கைக்கு அருகே தென்கிழக்கு வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டிருக்கும் நிலையில், பாம்பனில் கடல் சீற்றத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை திடீரென கடல் உள்வாங்கியிருப்பதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.