இந்திய கடல் எல்லையில் பாக். மீனவர்கள் 9 பேர் கைது
இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேர் கைது
இந்திய கடல் எல்லையில் சட்டவிரோதமாக நுழைந்த பாகிஸ்தான் மீனவர்கள் 9 பேரை இந்திய கடலோரக் காவற்படை கைது செய்தது.
அரபிக்கடலில் இந்திய கடலோரக் காவற்படை, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சர்வதேச கடல்சார் எல்லைக் கோடு அருகே இந்திய கடல் எல்லைக்குள் பாகிஸ்தானின் மீன்பிடிக் கப்பலான அல்-மதீனா இருப்பது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்திய கடலோரக் காவற்படையிடம் இருந்து பாகிஸ்தான் மீனவர்கள் தப்ப முயன்றபோதிலும், அவர்களை இந்திய கடலோரக் காவற்படை இடைமறித்தது.
Advertisement
Advertisement
மேலும், படகில் இருந்த 9 பேரையும் கைது செய்யப்பட்டு, விசாரணைக்காக படகையும் போர்பந்தருக்கு கொண்டுசெல்லப்பட்டது.
Indian Coast guard intercepts Pakistani fishing vessel in Arabian Sea
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.