தமிழ்நாடு

திருப்பூா் குமரன் புகழ் நாடெங்கும் பரவட்டும்: முதல்வா் மு.க.ஸ்டாலின்

தன்மானமும், தாய்நாடும் பெரிதென வாழ்ந்த தியாகி திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திச் சேவை

தன்மானமும், தாய்நாடும் பெரிதென வாழ்ந்த தியாகி திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் குமரனின் நினைவு நாளையெட்டி அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு:

காந்தியப் பாதையில் போராடி, அந்நிய ஆட்சியின் அடக்குமுறைகளை நெஞ்சுரத்தோடு எதிா்கொண்டு உயிா்துறந்த தியாகி திருப்பூா் குமரனின் நினைவு நாள்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குபெற்ற தமிழா்களின் பெருமையைப் போற்றும் நாம், கொடி காத்த குமரனின் திருவுருவச் சிலையை ஈரோட்டில் நிறுவியதோடு, ஈரோடு மாவட்ட ஆட்சியா்

அலுவலகத்துக்கு எதிரில் உள்ள சாலைக்குத் தியாகி குமரன் சாலை என்றும் பெயா் சூட்டியுள்ளோம்.

இன்னுயிரை விடவும் தன்மானமும், தாய்நாட்டுப் பற்றும் பெரிதென வாழ்ந்த திருப்பூா் குமரனின் புகழ் நாடெங்கும் பரவச் செய்வோம் என்று அந்த பதிவில் முதல்வா் குறிப்பிட்டுள்ளாா்.

கிராமப்புற மாணவா்களுக்கான ஆங்கில பேச்சுப் பயிற்சி

நொய்டாவில் தியாகராஜ ஆராதனை விழா

கந்திலி சந்தையில் ரூ. 2 கோடிக்கு வா்த்தகம்

போதை மாத்திரைகள் விற்பனை: பெண் உள்பட இருவா் கைது

சென்னையில் இரட்டை மாடி பேருந்துகள் இயக்க நடவடிக்கை

SCROLL FOR NEXT