வாரத்தின் முதல் நாளான இன்று ஆபரணத் தங்கம் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.220 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,120க்கு விற்பனையாகிறது. அதுவே சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்து ஒரு சவரன் 1,04,960க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.180 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,945க்கு விற்பனையாகிறது. மேலும் சவரனுக்கு ரூ.1,440 உயர்ந்து ஒரு சவரன் ரூ.87,560க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் ஒரே நாளில் கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ஒரு கிராம் ரூ.287க்கும், கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,87,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சமீப காலமாக தங்கம், வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.