தங்கம் வெள்ளி விலை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை காலை, மாலை என இரண்டு முறை உயர்ந்துள்ளது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் ஒரு கிராம் ரூ.160 உயர்ந்து ரூ. 13,610-க்கும், ஒரு சவரன் ரூ. 1,360 உயர்ந்து ரூ. 1,08,880-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
அதேபோன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ. 12 உயர்ந்து ரூ. 330-க்கும், ஒரு கிலோ ரூ.12 ஆயிரம் உயர்ந்து ரூ.3,30,000-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில் வர்த்தகம் நிறைவுபெறும்போது, தங்கம் - வெள்ளி விலை மீண்டும் உயர்ந்துள்ளது.
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை ஒரு கிராம் ரூ. 290 உயர்ந்து ரூ. 13,900-க்கும், ஒரு சவரன் ரூ. 2,320 உயர்ந்து ரூ. 1,11,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
காலையில் ரூ. 1,280-ம், மாலையில் ரூ. 2,320 என ஒரே நாளில் ரூ. 3,600 உயர்ந்துள்ளது. தங்கம் விலை நாள்தோறும் உயர்ந்து வருவதால் மக்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளி விலை நிலவரம்
தங்கத்தோடு போட்டிப்போட்டுக்கொண்டு வெள்ளி விலையும் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ. 10 உயர்ந்து ரூ.340-க்கும் ஒரு கிலோ ரூ. 3,40,000 ஆக விற்கப்படுகிறது. வெள்ளி காலையில் ரூ. 12ம், பிற்பகலில் ரூ. 10ம் உயர்ந்து ஒரே நாளில் ரூ. 22ம், கிலோவுக்கு ரூ. 22 ஆயிரம் உயர்ந்துள்ளது.
தங்கம் - வெள்ளியில் முதலீடு
தங்கம், வெள்ளியில் முதலீடு செய்வது பாதுகாப்பானது என்று கருதி பலரும் அதிகளவில் முதலீடு செய்து வருவதால் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.