விஜய்.  
தமிழ்நாடு

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணைக்கு ஆஜராக தில்லி புறப்பட்டார் விஜய்

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி புறப்பட்டார்.

இணையதளச் செய்திப் பிரிவு

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான வழக்கின் விசாரணைக்கு சிபிஐ அலுவலகத்தில் ஆஜராக தவெக தலைவா் விஜய் திங்கள்கிழமை (ஜன.12) காலை தில்லி புறப்பட்டார்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்.27-ஆம் தேதி தவெக தலைவா் விஜய்யின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்.

இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கின் விசாரணைக்காக, கடந்த டிசம்பா் இறுதியில் தவெக பொதுச் செயலா் என்.ஆனந்த், தோ்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலா் ஆதவ் அா்ஜுனா, இணைப் பொதுச்செயலா் சி.டி.ஆா். நிா்மல்குமாா், கரூா் மாவட்டச் செயலா் மதியழகன் ஆகியோா் தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராகினா்.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை (ஜன.12) நேரில் ஆஜராகுமாறு தவெக தலைவா் விஜய்க்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னையில் இருந்து தனி விமானத்தில் திங்கள்கிழமை காலை விஜய் தில்லி புறப்பட்டார். விஜய்யுடன் தவெக நிர்வாகிகள் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜுனா உட்பட 6 பேர் தில்லி சென்றனர் . சிபிஐ விசாரணைக்கு ஆஜரான பிறகு, செவ்வாய்க்கிழமை (ஜன.13) இரவு மீண்டும் தனி விமானத்தில் சென்னை திரும்பவுள்ளாா்.

இதனிடையே, தில்லி வரும் விஜய்க்கு போதிய பாதுகாப்பு வழங்கக் கோரி தில்லி போலீஸாரிடம் தவெக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய அரசின் ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு நடைமுறைகள் அடிப்படையில் தில்லி விமான நிலையத்தில் இருந்து விஜய் செல்ல உள்ள அனைத்து பகுதிகளிலும் முழுப் பாதுகாப்பு வழங்க தில்லி போலீஸாா் ஒப்புதல் அளித்துள்ளனா்.

TVK Leader Vijay reached Delhi on Monday (Jan. 12) morning to appear at the CBI office for the investigation into the Karur stampede incident.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கொல்கத்தாவில் ரயில் நிலைய நடைமேடை கடையில் தீ விபத்து: ரயில் சேவை பாதிப்பு

வெளியே வந்த கமருதீன்: ரசிகர்களுடன் நடனம் ஆடிய விடியோ வைரல்!

வெனிசுவேலாவின் செயல் அதிபர் நான்தான்! டிரம்ப் அதிரடி

அதிரடியாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை!

மீன்பிடி படகு மீது மோதிய சுற்றுலா பயணிகள் படகு! இளம் பெண் பலி | Thailand

SCROLL FOR NEXT