பொங்கல் பண்டிகை: சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணம்!
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகைக்காக தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்த பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம்.
அதன்படி நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்காக ஜன.9 முதலே ஏராளமானோா் தங்கள் சொந்த ஊா்களுக்குச் செல்லத் தொடங்கியுள்ளனா்.
Advertisement
Advertisement
இதற்காக ஜன.9 முதலே வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
அதன்படி ஜன.11 நிலவரப்படி பொங்கலையொட்டி இயக்கப்பட்ட 8,270 பேருந்துகளில் 3.58 லட்சம் பேர் பயணம் மேற்கொண்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
அதேசமயம் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல இதுவரை 2,38,535 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
அடுத்த இரு நாள்கள் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்பதால், பயணிகளின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படும்.
கடைசி நேர கூட்ட நெரிசலை தவிா்க்கும் விதமாக பொதுமக்கள் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பயணிக்கும்படி அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா்.
The State Transport Corporation has reported that 3.58 lakh people have traveled from Chennai so far for the Pongal festival.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.