போகி பண்டிகையையொட்டி புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களுக்கு நாளை (ஜன. 14) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி ஜன. 15 முதல் 18 வரை தொடர் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால், ஒரு நாள் முன்னதாக போகி பண்டிகைக்கும் (ஜன. 14) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் நாளை செயல்படாது என அரசுத் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 31 ஆம் தேதி (சனிக்கிழமை) கல்வி நிலையங்களும் அரசு அலுவலகங்களும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜன. 14- ஆம் தேதி அனைத்துப் பள்ளிகளுக்கும் தமிழக அரசு ஏற்கெனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.