Gold and silver price today: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து மீண்டும் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,170-க்கும், சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ஒரு சவரன் 1,05,360-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்துக்குப் போட்டியாக வெள்ளி விலை நேற்று ஒரு கிலோவுக்கு ரூ. 12,000 கூடியிருந்த நிலையில், இன்று (ஜன.13) ஒரேநாளில் கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 292-க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.5,000-ம் உயர்ந்து ஒரு கிலோ ரூ.2,92,000 என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
இதேவேகத்தில் உயரும்பட்சத்தில் இன்னும் ஓரிரு நாள்களில் இதுவரை இல்லாத வகையில் கிராம் ரூ. 300 என்ற புதிய உச்சத்தையும் வெள்ளி எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளாவிய வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள பதற்றம், அமெரிக்காவின் வரிவிதிப்பு, ஈரான் போர்ப்பதற்றம் உள்ளிட்டவற்றால் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பால் ஏற்பட்டுள்ள விலையேற்றம் இல்லத்தரசிகள் மற்றும் மக்களிடையே மீண்டும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.