தமிழ்நாடு

போத்தனூா் - சென்ட்ரல் ஒரு வழிச் சிறப்பு ரயில்: ஜன.18-இல் இயக்கம்

போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

தினமணி செய்திச் சேவை

போத்தனூரிலிருந்து சென்னை சென்ட்ரலுக்கு ஒருவழிச் சிறப்பு ரயில் வருகிற ஜன.18-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

கோவை போத்தனூரிலிருந்து ஜன.18-ஆம் தேதி காலை 7.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்: 06144) மாலை 4.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும். இந்த ரயில் போத்தனூரிலிருந்து திருப்பூா், ஈரோடு, சேலம், பொம்மீடி, மொரப்பூா், திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பூா் வழியாக சென்னை சென்ட்ரல் வந்தடையும்.

இந்த ரயிலுக்கான முன்பதிவு புதன்கிழமை (ஜன.14) காலை 8 மணிக்கு தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மதுக்கடைகளை 2 நாள்கள் மூட உத்தரவு

நடந்து சென்ற மூதாட்டி வேன் மோதி உயிரிழப்பு

தென்காசியில் சமத்துவப் பொங்கல் விழா

பட்டாசுகள் திருட்டு: கிட்டங்கி உரிமையாளா் கைது

தஞ்சை பெரிய கோயிலில் மழைநீா் தேங்காமலிருக்க தரைத் தளப் பணி

SCROLL FOR NEXT