தலைமைச் செயலகத்தில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் பங்கேற்பு 
தமிழ்நாடு

தலைமைச் செயலகத்தில் சமத்துவப் பொங்கல் விழாவில் முதல்வர் பங்கேற்பு!

சென்னை தலைமைச் செயலக பொங்கல் விழா...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டுள்ளார்.

பொங்கல் பண்டிகை நாளை(ஜன. 15) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு அலுவலகங்களில் சமத்துவப் பொங்கல் விழா நடைபெற்று வரும் நிலையில் இன்று(ஜன. 14) சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தலைமைச் செயலாளர் முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மேலும் ஐஏஎஸ் அதிகாரிகளும் அரசு ஊழியர்களும் பாரம்பரிய வேட்டி, சட்டை அணிந்து பங்கேற்றனர்.

பொங்கல் வைத்து கொண்டாடிய நிலையில் முதல்வர் மற்றும் துணை முதல்வர் அனைவருக்கும் பொங்கல் வழங்கினர். அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டனர்.

M.K. Stalin participates in the Pongal celebration at Chennai Secretariat

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஐசிசி தரவரிசை: ரோஹித்தை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடம்! 4 ஆண்டுகளுக்குப் பின்!

பொங்கல் விடுமுறை: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

என்.சி.இ.ஆர்.டி-இல் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: உடனே விண்ணப்பிக்கவும்!

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு பனிமூட்டம்!

தில்லியில் 81 புதிய சுகாதார மையங்கள் தொடக்கம்!

SCROLL FOR NEXT