தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி தொடங்குவதில் தாமதம்!

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதைப் பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாவட்டம் பாலமேட்டில் நடைபெறவிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி பொங்கல் பண்டிகையொட்டி, மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறவது வழக்கம். அதன்படி, இன்று (ஜன.16) பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காலை 7 மணிக்குத் தொடங்கவிருந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருந்தார்.

இந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரத் தாமதம் ஏற்பட்டதால், இரண்டு மணிநேரம் தாமதமாக காலை 9 மணிக்கு போட்டி தொடங்கும் என ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்தும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இந்தப் போட்டியில் சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறுகிறது. சுற்றுக்குத் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத்துறை, கால்நடைத்துறை மற்றும் காவல் துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 1,000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

There has been a delay in starting the Jallikattu event that was scheduled to take place in Palamedu, Madurai district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

4 நாள்களில் ரூ.200 கோடி வசூல்..! சிரஞ்சீவிக்கு கம்பேக் கொடுத்த அனில் ரவிபுடி!

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” - பிரதமர் மோடி!

ஜீவாதான் பொங்கல் வெற்றியாளர்..! மிகுந்த வரவேற்பில் தலைவர் தம்பி தலைமையில்!

DINAMANI வார ராசிபலன்! | ஜன.18 முதல் 24 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

4 நாள்களுக்குப் பின் தங்கம் விலை குறைவு.. இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT