FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
தமிழ்நாடு

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ‌திங்கள்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.

Updated On : 23 பிப்ரவரி 2026, 1:36 pm IST
அம்மன்குறிச்சி ஜல்லிக்கட்டுப் போட்டி.
பகிர்:

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள அம்மன்குறிச்சி முத்துமாரியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி ‌திங்கள்கிழமை ஜல்லிக்கட்டுப்போட்டி நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டுப்போட்டியை இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார். தொடக்கமாக கோயில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. தொடர்ந்து திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட 750 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகிறது.

வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 270 மாடு பிடி வீரர்கள் களமிறங்கி காளைகளை அடக்க முற்பட்டு வருகின்றனர். காளைகளை சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பட்டுப்புடவை, கட்டில், மின்விசிறி மற்றும்‌ எவர்சில்வர் பொருள்கள் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தவைமையிலான போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

summary

A Jallikattu competition is taking place near Ponnamaravathi.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments