முகப்பு
கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி.
தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியதைப் பற்றி...

தமிழ்நாடு

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியது!

பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக தொடங்கியதைப் பற்றி...

Updated On : 16 ஜனவரி, 2026 at 3:50 AM
கோலாகலமாக தொடங்கிய பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி.
பகிர்:

மதுரை மாவட்டம் பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டி கோலாகலமாக இன்று காலை தொடங்கியது.

பொங்கல் பண்டிகையொட்டி, ஆண்டுதோறும் தமிழரின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறுவது வழக்கம். பாலமேட்டில் மஞ்சமலை ஆற்று திடலில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. அதன்படி, இன்று (ஜன.16) பாலமேட்டில் போட்டிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

காலை 7 மணிக்குத் தொடங்கவிருந்த போட்டியை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கவிருந்தார்.

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகையில் தாமதம் ஏற்பட்டதால், காலை 9 மணிக்கு போட்டி தொடங்கியது. துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வரத் தாமதம் ஆனதால் போட்டிகள் முன்னதாகத் தொடங்கப்பட்டன.

மதுரை மாவட்ட ஆட்சியர் பிரவீன் குமார், காவல் துறை கண்காணிப்பாளர் அரவிந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

களமிறக்கப்படும் வீரர்கள் மற்றும் காளைகளுக்கு உடற்தகுதி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, உறுதிமொழி ஏற்புடன் நிகழ்ச்சி தொடங்குகியது. முதலில், ஊர் கோயில் காளைகள் வாடிவாசல் இருந்து வரிசையாக அவிழ்த்து விடப்பட்டன.

இந்தப் போட்டியில் சுமார் 1000 காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களம் இறங்க உள்ளனர். 12 சுற்றுகள் வரை போட்டிகள் நடைபெறுகிறது. சுற்றுக்குத் தலா 50 வீரர்கள் களமிறக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுகாதாரத்துறை, கால்நடைத்துறை, உள்ளாட்சித் துறை மற்றும் காவல் துறையினர் தீவிர பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜல்லிக்கட்டு போட்டியையொட்டி 1000-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

10க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் உள்ளன. வீரர்களுக்கு காயம் ஏற்படும் பட்சத்தில் அவர்கள் உடனடியாக ஆம்புலன்ஸில் ஏற்றப்பட்டு போதிய முதலுதவிகள் அளிக்கப்பட்டு அருகில் உள்ள அரசு சிறப்பு முதலுதவி மையத்தில் அனுமதிக்கப்படுவார்கள். மேல் சிகிச்சை தேவைப்படும் பட்சத்தில் அரசு ராஜாஜி மருத்துவக்கல்லூரிக்கு அழைத்துச் செல்லவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு நிசான் கார், டிராக்டர், பைக் மற்றும் தங்க நாணயங்கள் பரிசாக வழங்கப்படவுள்ளன.

அதேபோன்று ஒவ்வொரு சுற்றிலும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கும் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பீரோ, கட்டில், மெத்தை, சைக்கிள், அண்டா உள்ளிட்ட பரிசு பொருள்களும் வழங்கப்படுகின்றன.

summary

Deputy Chief Minister Udhayanidhi Stalin inaugurated the Palamedu Jallikattu competition in Madurai district.

முழு கட்டுரையைப் படிக்க →