பொன்னமராவதி அருகே சிவராத்திரி விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி!
பொன்னமராவதி அருகே சிவராத்திரி விழாவையொட்டி ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்றது வருவது குறித்து...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இடையாத்தூர் பொன் மாசிலிங்க அய்யனார் கோயில் சிவராத்திரி விழாவையொட்டி செவ்வாய்க்கிழமை (பிப். 17) ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது.
ஜல்லிக்கட்டுப் போட்டியை இலுப்பூர் வருவாய்க் கோட்டாட்சியர் கோகுல் சிங் தொடங்கி வைத்தார். தொடக்கத்தில், கோயிலின் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன.
இதனைத் தொடர்ந்து, திருச்சி, சிவகங்கை, மதுரை, புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து அழைத்து வரப்பட்ட 800 காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
Advertisement
Advertisement
வாடிவாசலிலிருந்து சீறிப்பாய்ந்த காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் களமிறங்கி போட்டியில் ஈடுபட்டு வருகின்றனர். காளைகளைச் சிறந்த முறையில் அடக்கிய வீரர்களுக்கும், களத்தில் பிடிபடாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டு வருகின்றது.
பொன்னமராவதி காவல் துணை கண்காணிப்பாளர் தங்கராமன் தலைமையில் அங்கு ஏராளமான காவல் துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
A Jallikattu competition is being held near Ponnamaravathi in Pudukkottai district.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.