நீலகிரியில் உறைபனி  
தமிழ்நாடு

நீலகிரி, கொடைக்கானலில் உறைபனி எச்சரிக்கை!

உறைபனி எச்சரிக்கை பற்றி..

இணையதளச் செய்திப் பிரிவு

நீலகிரி, கொடைக்கானலில் அடுத்த 2 நாள்களுக்கு உறைபனி காணப்படும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்குப் பருவமழை அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய தென்னிந்திய பகுதிகளிலிருந்து விலகுவதற்கான வாய்ப்புள்ளது.

குமரிக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

ஜன. 17 முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

குறைந்தபட்ச வெப்பநிலை

ஜன. 17 முதல் 21 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை ஓட்டி இருக்கக்கூடும்.

உறைபனி எச்சரிக்கை

ஜன. 17, 18ல் தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் (திண்டுக்கல் மாவட்டம்) ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.

சென்னையை பொருத்தவரை..

இன்று (17-01-2026) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.

The meteorological department has announced that frost will be observed in Nilgiris and Kodaikanal for the next two days.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜல்லிக்கட்டு: முன்னுரிமை அடிப்படையில் அரசு வேலை! முதல்வரின் அறிவிப்பு குறித்து அமைச்சர் மூர்த்தி

பரமக்குடியில் இமானுவேல் சேகரனார் மணிமண்டபம்: திறந்து வைத்தார் மு.க. ஸ்டாலின்!

எம்ஜிஆருக்கு புகழ் வணக்கம்: தவெக தலைவர் விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர் பீமண்ணா காந்த்ரே 102 வயதில் காலமானார்!

இது ஜனநாயகம் அல்ல; பண நாயகம்: சீமான்

SCROLL FOR NEXT