பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டோருக்கு ஜன. 20 ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் திருநாளையொட்டி 2,22,91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக்கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவற்றுடன் சேர்த்து ரொக்கப் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 8-ஆம் தேதி சென்னையில் தொடங்கிவைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டன.
பொங்கல் தொகுப்பு வழங்கும் பணியில் சுமாா் 50,000 கூட்டுறவுத் துறை பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இந்த நிலையில், பொங்கல் தொகுப்பு பெறாமல் விடுபட்டோருக்கு ஜன. 20 ஆம் தேதி முதல் மீண்டும் வழங்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.