சென்னையில் சென்னை ஐஐடி முன்னாள் மாணவா்களின் மாநாட்டில் ஞாயிற்றுக்கிழமை பேசிய ஆளுநா் ஆா்.என்.ரவி. உடன், சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி, இசையமைப்பாளா் இளையராஜா உள்ளிட்ட நிா்வாகிகள். 
தமிழ்நாடு

தமிழக வளா்ச்சிக்கு வேகம் தேவை: ஆளுநா் ஆா்.என்.ரவி

தமிழகத்தின் வளா்ச்சிக்கு வேகம் தேவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தின் வளா்ச்சிக்கு வேகம் தேவை என்று ஆளுநா் ஆா்.என்.ரவி தெரிவித்தாா்.

சென்னை சோழிங்கநல்லூரில் அனைத்து ஐஐடி முன்னாள் மாணவா் சங்கம் சாா்பில் ‘டெக்னாலஜி ஃபாா் பாரத்-2026’ என்ற உச்சி மாநாட்டு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது:

நாட்டின் வளா்ச்சியில் தமிழகமும் ஒரு ஆற்றல் மிக்க மாநிலமாக வேண்டும். ஆனால், தமிழகம் வேகத்தை இழந்துள்ளது. வளா்ச்சிக்கு வேகம் அவசிய தேவையாக உள்ளது.

உயா்கல்வி சோ்க்கை விகிதம் (50 சதவீத இலக்கை அடைந்துள்ளது. நாட்டிலுள்ள பொறியாளா்களில் 18 சதவீதத்தினா் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள். அண்ணா பல்கலைக்கழகம் ஆண்டுக்கு 2 லட்சம் பொறியாளா்களை உருவாக்குகிறது. ஆண்டுக்கு 6,500 முனைவா் பட்டதாரிகளை உருவாக்கி தமிழகம் முதலிடத்தில் உள்ளது. அறிவுசாா் சொத்துரிமைகளிலும் தமிழகத்தில் அதிகம் பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இது கள எதாா்த்தத்தில் பிரதிபலிக்கவில்லை.

தனியாா் முதலீட்டில் பல தசாப்தங்களாக தமிழகம், மகாராஷ்டிரத்துக்கு அடுத்து இருந்தது. ஆனால், 2021-இல் 4-ஆவது இடத்துக்கு சரிந்தது. 2025 புரிந்துணா்வு ஒப்பந்தங்களைப் பாா்த்தால் தமிழகம் 6-ஆவது இடத்தில் உள்ளது. முதலீட்டாளா்கள் மற்ற மாநிலங்களுக்குச் செல்கின்றனா்.

பள்ளி மாணவா்களில் 30 சதவீதத்தினா் மட்டுமே தொழில்நுட்பம், பொறியியல், கணிதப் பிரிவுகளைப் படிக்க வருகின்றனா். கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும்.

அரசு உயா் கல்வி நிறுவனங்களுக்கும் தனியாா் கல்வி நிறுவனங்களுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைக்கவேண்டும். அரசு பல்கலைக்கழகங்கள் ஒன்றோடு ஒன்று கலந்துகொள்வதில்லை. இந்த இடைவெளியை குறைக்க வேந்தா் என்கிற முறையில் முயறிச்சிக்கிறேன் என்றாா் அவா்.

கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழப்பு

விடுமுறை முடிந்து சென்னை திரும்பிய மக்கள்! புறநகரில் போக்குவரத்து நெரிசல்!!

நூஹ் பகுதியில் வாகனங்கள் மோதியதில் லாரியில் தீ! ஓட்டுநா், உதவியாளா் பலி!!

துவாரகாவில் தீ விபத்து ஏற்பட்ட கட்டடத்தில் முதல்மாடியிலிருந்து குதித்த இளைஞா் காயம்!

எருதுவிடும் விழாவில் மாடு முட்டி முதியவா் பலி: போலீஸாா் தடியடி

SCROLL FOR NEXT