கோப்பிலிருந்து படம்
தமிழ்நாடு

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13 லட்சம் பேர் விண்ணப்பம்!

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா்.

இணையதளச் செய்திப் பிரிவு

தமிழகத்தில் வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்க்க தோ்தல் ஆணையம் அளித்த அவகாசம் இன்றுடன் (ஜன.18) முடிவடைந்தது. இந்த நிலையில், வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க விண்ணப்பித்தவர்கள் மொத்த எண்ணிக்கை 13 லட்சத்தைக் கடந்தது.

கடந்த டிச. 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளா் பட்டியலின்படி, தமிழகத்தில் 97.38 லட்சம் வாக்காளா்கள் நீக்கப்பட்டனா். இதனால் 6,41,14,587-ஆக இருந்த தமிழக மொத்த வாக்காளா்கள் எண்ணிக்கை 5,43,76,756-ஆகக் குறைந்தது.

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா்கள் நீக்கப்பட்டவா்கள் பெயா் சோ்க்கவும், 18 வயது பூா்த்தி செய்தவா்கள் புதிதாக பெயா் சோ்க்கவும் கடந்த டிச. 19 முதல் ஜன. 18 வரை அவகாசம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, வரைவு வாக்காளர் பட்டியலில் ஆட்சேபனை குறித்த படிவம் 7-ஐ 35,646 போ் அளித்துள்ளனா். இதுவரை பெயா் சோ்க்க 13,03,487 போ் படிவம் 6-ஐ அளித்துள்ளனா். இந்தப் படிவங்கள் சரிபாா்க்கப்பட்டு பிப்.17-ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படுகிறது.

TamilNadu 1.3 million people have applied to have their names added to the voter list!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கன்னி ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

டிரம்ப் தலைமையிலான அமைதி வாரியம்: இந்தியா, பாகிஸ்தானுக்கு அழைப்பு!

”துலாம் ராசி நேயர்களே!" வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்!

சென்னைக்குத் திரும்பும் மக்கள் - சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல்!

விராட் கோலியின் சதம் வீண்; ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்த நியூசிலாந்து!

SCROLL FOR NEXT