தை அமாவாசையை முன்னிட்டு இன்று(ஜன. 18) காவிரி கரையில் ஏராளமானோர் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபாடு மேற்கொண்டனர்.
மாதம் தோறும் அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள், தட்சிணாயன புண்ணிய காலம் தொடங்கும் தை அமாவாசையில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாகப் புராணங்கள் கூறுகின்றன.
மேலும் காவேரி நதியானது குடகு மலையில் தோன்றி மயிலாடுதுறை மாவட்டம், காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவேரி பூம்பட்டினம் என அழைக்கப்பட்ட பூம்புகாரில் சங்கமத்துறையில் புனித நீராடி தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்கு சென்ற பலன் கிடைப்பதாக காவேரி புராணம் என்ற நூல் கூறுகிறது.
நிகழாண்டு தை அமாவாசையை ஒட்டி இன்று, பூம்புகார் காவேரி கடலோடு சங்கமிக்கும் சங்கமத்துறையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி தனது முன்னோர்கள் நினைவாக தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.
மேலும் சுமங்கலி பெண்கள் காவிரி நதியில் மங்களப் பொருள்களை இட்டு வழிபாடு நடத்தினார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.