வரும் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் என்று காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செயற்குழு கூட்டம் இன்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மொத்தம் 91 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் 30 பேர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ப. சிதம்பரம், கே.எஸ். அழகிரி, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதழ் கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர்,
இந்த ஆண்டு காங்கிரஸ் கட்சியில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும் புதிய காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 6 மாதங்கள் மாவட்டத் தலைவர்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படும். சரியாக பணியாற்றப்படவில்லை எனில் மாற்றப்படுவார்கள்.
சட்டப்பேரவைத் தெதாலையோட்டி வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. விருப்ப மனு அளித்தவர்களிடம் விரைவில் நேர்காணல் நடைபெற்று வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள்" என்றார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறதா? என்ற கேள்விக்கு 'கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் கருத்து கேட்டுள்ளனர். அனைவரும் தங்களுடைய விருப்பங்களைத் தெரிவித்துள்ளனர். கருத்துகளின் அடிப்படையில் கூட்டணி குறித்து இறுதியாக அகில இந்திய தலைமை முடிவு செய்யும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்' என கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.