சென்னைக்கு பிரதமர் நரேந்திர மோடி வரவுள்ளதையொட்டி சென்னையில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. தமிழகத்துக்கு ஜன. 23 வருகை தரும் பிரதமர் மோடி, இங்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தேர்தல் கூட்டணி வியூகம் குறித்து பேசுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக நிலவுகிறது.
இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய இடங்கள் ‘சிவப்பு மண்டலமாக’ அறிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில், ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி கருவிகள், ட்ரோன்களில் பறக்கவிடப்படும் கேமிராக்கள், ஹாட் ஏர் பலூன்கள் ஆகியவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.