தமிழக சட்டப்பேரவையின் 2 ஆம் கூட்டத்தொடரில் இன்று மறைந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
2026 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று(ஜன. 20) தொடங்கியது. ஆண்டின் முதல் நாள் பேரவையில் ஆளுநர் உரையாற்றி தொடக்கிவைப்பது வழக்கம்.
அதன்படி பேரவைக்கு வந்த ஆளுநர் ஆர்.என். ரவி, பேரவையில் முதலில் தேசிய கீதம் இசைக்கப்படாததால் அவையில் இருந்து வெளியேறிவிட்டார். இதனால் சிறிது சலசலப்பு ஏற்பட்டது. இதன்பின்னர் 2 ஆம் கூட்டத்தொடர் இன்று காலை 9.30 மணியளவில் தொடங்கியது. மறைந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது.
முன்னாள் எம்எல்ஏக்கள் சா. பன்னீர்செல்வம், எல். கணேசன், பொன்னுச்சாமி ஆகியோருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன், ஏ.வி.எம். சரவணன், முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவரான அருணாச்சலம் வெள்ளையன், மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டீல் ஆகியோரது மறைவுக்கும் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. பேரவை உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர் அவை நாளை(ஜன. 22) காலை 9.30 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.