முகப்பு
தமிழ்நாடு

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம்!

மேட்டூர் அனல் மின்நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Updated On : 21 ஜனவரி, 2026 at 11:42 AM
மேட்டூர் அனல் மின் நிலையம்
பகிர்:

சேலம் : மேட்டூர் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யக்கோரி காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.

மேட்டூரில் 840 மற்றும் 600 மெகாவாட் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் நிரந்தரமாக 1500- கும் மேற்பட்டோரும், ஒப்பந்த அடிப்படையில் 1,400 பேரும் வேலை செய்து வருகின்றனர்.

ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு கடந்த காலங்களில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்நிலையில் திமுக தேர்தல் வாக்குறுதி 153-ன் படி ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என தெரிவிக்கபட்டது.

ஆனால் நான்காண்டுகளுக்கு மேலாகியும் அனல் மின் நிலைய ஒப்பந்த தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்படவில்லை.

இதனைக் கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் அனல் மின் நிலைய நுழைவாயில் முன்பு அமர்ந்து காத்திருப்புப் போராட்டம் செய்து வருகின்றனர்.

பணி நிரந்தரம் செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என ஒப்பந்த தொழிலாளர்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுடன் அனல் மின் நிலைய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →