பகுதிநேர ஆசிரியர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் கடந்த 17 நாள்களாக சென்னையில் போராட்டம் நடத்தி வந்தனர். பல்வேறு விதமான போராட்டங்களில் அவர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் அவர்களின் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
முதல்வர் ஸ்டாலின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கொடுத்த உறுதியை ஏற்று போராட்டதை ஒத்திவைத்திருப்பதாக பகுதிநேர ஆசிரியர்களின் கூட்டு இயக்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் சுமாா் 2012 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியா்கள் அரசுப் பள்ளியில் பணியாற்றி வருகிறாா்கள்.
சம வேலைக்கு சம ஊதியம், பணி நிரந்தரம் ஆகியவற்றை வலியுறுத்தி அவர்கள் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.