திமுகவை வீழ்த்த உள்ள ஒரே தலைவர் விஜய் என்று செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மாமல்லபுரத்தில் நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டத்தில் அவர் பேசுகையில், திமுக உள்பட அனைத்துக் கட்சியினர் வீடுகளிலும் விஜய்க்கு வாக்கு உள்ளது. விஜய்யைக் கண்டு அனைத்துக் கட்சியினரும் ஆடிப்போய் உள்ளனர். கூட்டணி இல்லை என்று கட்சியினருக்கு கவலை வேண்டாம். திமுகவை வீழ்த்த உள்ள ஒரே தலைவர் விஜய்.
10 கட்சி கூட்டணியை விஜய் தூள் தூளாக்குவார். தூங்குவோர், வயதானவர்கள் அருகில் விசில் அடிக்க வேண்டாம். அவர்கள் நிலைத் தடுமாறிவிடுவார்கள். ஓட்டு போய்விடும், கவனமாக இருக்க வேண்டும். எம்ஜிஆர் உள்பட பல தலைவர்களை பார்த்தவன் நான், ரூ.1,000 கோடி வருவாயை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர் விஜய் என்றார்.
த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில் செயல் வீரர்கள் கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியது. தவெகவிற்கு விசில் சின்னம் கிடைத்தபிறகு நடைபெறும் முதல் கூட்டத்தில் செங்கோட்டையன், என்.ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தின் தொடக்கமாக மொழிப்போர் தியாகிகளுக்கு விஜய் மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து கொள்கைத் தலைவர்களுக்கு விஜய் மலர் தூவி மரியாதை செய்தார். முன்னதாக விஜய் மேடைக்கு வரும்போது, தொண்டர்கள் அவருக்கு விசில் அடித்து உற்சாக வரவேற்பு கொடுத்தனர். கடந்த டிசம்பர் மாதத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு, மீண்டும் கட்சி நிகழ்வில் விஜய் உரையாற்றவுள்ளதால் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.