குடியரசு நாள் விழாவையொட்டி, தமிழக காவல் துறையைச் சேர்ந்த 3 காவல் துறை அதிகாரிகளுக்கு, குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
குடியரசு நாளையொட்டி, ஒவ்வோா் ஆண்டும் காவல் துறையில் சிறப்பாக செயல்பட்ட அதிகாரிகளுக்கு மெச்சத்தக்க சேவைக்கான பதக்கங்கள், மிகச் சிறப்பாக செயல்படும் காவலர்களுக்கான பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகின்றன.
நடப்பு ஆண்டு குடியரசு நாளையொட்டி, பதக்கங்களுக்கான பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கண்காணிப்பாளர் குமரவேலு, துணை ஆணையர் அன்வர் பாஷா, ஐஜி மகேஸ்வரிக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதேபோல், சிறப்பாக பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, காவல் ஆணையர்கள் அனில் குமார், சரவன சுந்தர், துணை கண்காணிப்பாளர் மணிகண்டன் உள்ளிட்ட 21 பேருக்கு பதக்கங்கள் வழங்கப்படவுள்ளன.
தமிழக தீயணைப்புத் துறையில் உள்ள நிலைய அதிகாரிகள் ஆண்டவராஜ் ஆறுமுகம், சுரேஷ்குமார் பொன்னுசாமி மற்றும் தீயணைப்பு வீரர் இளங்கோவன் ஆகியோருக்கு சிறப்பாக பணியாற்றியதற்கான பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீர்திருத்த சேவைகளுக்கான பதக்கங்கள் உதவி சிறை அலுவலர் பொன் பகவத் சிங், செல்லதுரை, சிவகாமி ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.