தங்கம் விலை குறைவு! வெள்ளி கிராம் ரூ. 400-ஐ நோக்கி!
தங்கம், வெள்ளி இன்றைய விலை நிலவரம் பற்றி...
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை காலை சற்று குறைந்தாலும், வெள்ளியின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு, சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடு உயர்வு உள்ளிட்ட காரணங்களால் தங்கம் விலை சவரன் ரூ. ஒரு லட்சத்தைக் கடந்து தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
இதனிடையே, தங்கத்துக்கு போட்டியாக வெள்ளியின் விலையும் அதிரடியாக உயர்ந்து வரும் நிலையில், கிராம் ரூ. 400-ஐ எட்டவுள்ளது.
Advertisement
Advertisement
வாரத்தின் முதல் நாளான நேற்று, ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 1,20,200-க்கும், ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ. 375-க்கும் விற்பனையானது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 520 குறைந்து ரூ. 1,19,680-க்கு விற்பனையாகி வருகின்றது. ஒரு கிராம் விலை ரூ. 14,960 ஆக உள்ளது.
இதனிடையே, வெள்ளியின் விலை கிலோவுக்கு அதிரடியாக ரூ. 12,000 அதிகரித்துள்ளது. இன்று காலை ஒரு கிராம் ரூ. 387-க்கும், ஒரு கிலோ ரூ. 3,87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Gold prices fallen: Silver is heading towards Rs. 400 per gram!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.